கதம்பம்

லண்டன் டூ கல்கத்தா

Published On 2024-04-26 10:15 GMT   |   Update On 2024-04-26 10:15 GMT
  • பேருந்தின் மேல் தளத்தில் ஒரு கண்காணிப்பு அறை இருந்தது.
  • ஈரானியப் புரட்சி மற்றும் சோவியத் - ஆப்கான் போர் துவங்கியதும் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடிவுக்கு வந்தது.

லண்டனில் இருந்து கல்கத்தாவுக்கு பேருந்து போக்குவரத்து இருந்தது என்பது நம்மில் பலர் அறியாத செய்தி…

1957ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த பேருந்து சேவை 1979 வரை நீடித்தது .

"The Indiaman" என்று அழைக்கப்பட்ட இந்த பயண திட்டம் உலகின் மிக நீளமான பேருந்து வழித்தடமாக கருதப்படுகிறது.

முதல் பேருந்து லண்டனில் இருந்து 1957, ஏப்ரல் 15 ஆம் நாள் புறப்பட்டது.

இந்த பஸ் லண்டன் விக்டோரியா டெர்மினலிலிருந்து புறப்பட்டு பெல்ஜியம், யூகோஸ்லாவியா, துருக்கி, ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழையும்..

பிறகு புதுடெல்லி, ஆக்ரா, அலகாபாத் பனாரஸ் வழியாக கல்கத்தாவை அடையும் .

லண்டனில் துவங்கி கல்கத்தாவை அடைய சுமார் 50 நாட்கள் ஆனது…

லண்டனில் இருந்து கல்கத்தா வரையிலான மொத்த பயண தூரம் 10,000 மைல்கள் (16,100 கிமீ)

1957 இல் ஒரு வழி பயணத்திற்கான கட்டணம் £85 பவுண்டுகள்.

இது 1973 இல் £ 145 பவுண்டாக உயர்த்தப்பட்டது

இந்த கட்டணத்தில் உணவு, தங்குமிட செலவுகள் உள்ளடங்கும்.

"ஆல்பர்ட் டிராவல்" என்ற நிறுவனம் இயக்கிய இந்த பேருந்தில் பயணிகளுக்கு புத்தகம் வாசிக்கும் வசதிகள் இருந்தன. அனைவருக்கும் தனித்தனியாக தூங்கும் இடங்கள், வெப்பமூட்டிகள் / குளிரூட்டிகள் இருந்தன.

ஒரு சிறிய சமையலறையும் உண்டு..

பேருந்தின் மேல் தளத்தில் ஒரு கண்காணிப்பு அறை இருந்தது.

வியன்னா, இஸ்தான்புல், காபூல் டெஹ்ரான் ஆகிய சுற்றுலா நகரங்களில் ஷாப்பிங் செய்வதற்காக பேருந்து நிற்கும்.

இந்தியாவில் பனாரஸ் எனப்பட்ட வாரணாசி, யமுனை நதிக்கரையில் தாஜ்மகால் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் செலவிட நேரம் தரப்பட்டது .

1970 களில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகளால் தரைவழிப் பாதை கடும் நெருக்கடிக்கு உள்ளானது.

பின்னர் 1979 இல் ஈரானியப் புரட்சி மற்றும் சோவியத் - ஆப்கான் போர் துவங்கியதும் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடிவுக்கு வந்தது.

-சுந்தரம்

Tags:    

Similar News

இலவசம்