கதம்பம்
null

எல்லாம் மனம் தான்!

Published On 2024-04-24 10:15 GMT   |   Update On 2024-04-24 10:27 GMT
  • மனதிற்கு உடல் மீது அபாரமான பலம் உண்டு.
  • உங்கள் மனம்தான் உங்கள் ஆரோக்கியம்.

நோய்களில் 70% மனம் சம்பந்தப்பட்டவை தான்.

ஆனால் அவற்றை உடல் மூலமாகத்தான் வெளிப்படுத்த முடியும்.

ஆனால் நோயின் துவக்கம் என்னவோ மனத்தில்தான்.

நோய் நீங்கி விட்டது என்கிற எண்ணத்தை மனதிற்குள் செலுத்தி விட்டால் நோய் மறைந்து விடும்.

மனதிற்கு உடல் மீது அபாரமான பலம் உண்டு.

உங்கள் உடலில் எல்லாவற்றையும் மனம்தான் நடத்திச் செல்கிறது.

உங்கள் மனதை மாற்றுவதன் மூலமாக உடலிலுள்ள எழுபத சதவீத நோய்களை மாற்ற முடியும்.

உங்கள் மனம் உங்களை சில நோய்களுக்குத் தயாராக வைத்திருக்கிறது..

சில நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது..

உங்கள் மனம்தான் உங்கள் உலகம்.

உங்கள் மனம்தான் உங்கள் ஆரோக்கியம்.

உங்கள் மனம்தான் உங்கள் நோய்.

நீங்கள் உங்கள் சொந்த மனதை தூக்கிப் போடுங்கள்..

அப்போதுதான் எதார்த்தம் என்னவென்று தெரிய வரும்.

அதன் பிறகு உங்கள் மனம் பிரபஞ்ச மனம் ஆகிறது.

உங்கள் சொந்த மனம் உங்களிடம் இல்லாத போது உங்கள் உள்ளுணர்வே பிரபஞ்சமாகிறது.

உங்கள் எல்லா பிரச்சினைகளுமே உள ரீதியானவை.

உடலும் மனமும் இரண்டல்ல..

உடலின் உள்பகுதி தான் மனம்.

உடல், மனத்தின் வெளிப்பகுதி.

உடலில் துவங்கும் எதுவும் மனத்திற்குள் நுழைய முடியும்.

அது மனத்தில் துவங்கி உன் உடலுக்குள் நுழைய முடியும்.

-ஓஷோ

Tags:    

Similar News

இலவசம்