கதம்பம்
null

உயரமான மலை எது?

Published On 2024-04-22 12:00 GMT   |   Update On 2024-04-22 12:00 GMT
  • கியா மலை ஹவாயில் இருக்கும் ஒரு எரிமலை.
  • கணக்கில் எடுத்தால் சிம்பரோஸா மலை தான் உயரம் என்கிறார்கள்.

உலகின் உயரமான மலை எது?

எவெரெஸ்ட் என்றால் பொதுவாக சரிதான். ஆனால் இதுகுறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

பொதுவாக மலைகளின் உயரத்தை அளக்கையில் கடல் மட்டத்தில் இருந்து எத்தனை உயரம் என்பதை வைத்து அளந்துகொண்டிருந்தார்கள். இதன்படி உலக சராசரி கடல்மட்டம் அளக்கபட்டு, அதனுடன் மலைகளின் உச்சிகள் ஒப்பிடபட்டு எவெரெஸ்ட் உலகின் உயரமான மலை என கருதப்பட்டது.

ஆனால் கின்னஸ் ரெகார்ட்ஸ் புத்தகம் உலகின் உயரமான மலை "கியா மலை" (Mauna Kea, Hawaii, USA) என அறிவித்துவிட்டது.

"இது எப்ப நடந்தது? இது என்ன சதி" என டென்சன் ஆக வேண்டாம். நமக்கு தெரியாமல் பல விசயங்கள் இப்படி நடந்துகொண்டுள்ளன

கியா மலை ஹவாயில் இருக்கும் ஒரு எரிமலை. அதை உலகின் உயரமான மலை என அறிவிக்க காரணம் என்ன?

இப்போது இருவரின் உயரத்தை ஒப்பிட என்ன செய்வீர்கள்? கடல்மட்டத்தில் இருந்து அவர்களின் உயரம் என்ன என அளப்பீர்களா? அல்லது உச்சிமுதல் பாதம் வரை உயரம் என்ன என அளப்பீர்களா?

மலையின் அடி முதல் நுனிவரை உயரத்தை கணக்கிட்டால் கியா மலையின் உயரம் 10,211 மீட்டர். எவெரெஸ்டின் உயரம் 8849 மீட்டர்.

கியா மலையின் அடியாழம் சமுத்திரத்தில் உள்ளது.

இதில் சர்ச்சை வரவும் உலகின் உயரமான மலை எவெரெஸ்ட் (Highest), நீளமான மலை கியா (Tallest mountain) என தீர்ப்பு கொடுத்துவிட்டார்கள்.

இப்படி குழப்பம் இருக்க நடுவே தென்னமெரிக்காவின் ஈக்வடார் நாட்டுகாரர்களும் தங்கள் நாட்டு சிம்பராஸோ மலையை தூக்கிகொண்டு வந்து "இதான் உலகின் உயரமான மலை" என்கிறார்கள்.

அதாவது "அடி முதல் நுனி வரை, கடல்மட்டம்" கணக்கு எல்லாம் செல்லாது. பூமத்திய ரேகை பகுதியில் உலகமே சற்று வீங்கியது மாதிரி தான் உள்ளது. அதை கணக்கில் எடுத்தால் சிம்பரோஸா மலை தான் உயரம் என்கிறார்கள்.

- நியாண்டர் செல்வன்.

Tags:    

Similar News

தம்பிடி