கதம்பம்

விலங்குகளின் பண்புகள்

Published On 2024-04-20 11:15 GMT   |   Update On 2024-04-20 11:15 GMT
  • யானைகள் கூட்டத்தையும் மூத்த பெண் யானையே தலைமை தாங்கி வழிநடத்தும்.
  • நிறைய உயர்ந்த பண்புகளை காட்டு விலங்குகளிடம் பட்டியலிட முடியும்.

விலங்குகளின் சில குணங்கள் நம்மை திணறடிக்கும். மனிதனை போலவே மிருகங்களுக்கு கோபம் பாசம் போன்ற உணர்வுகளும் உண்டு. அதே வேளையில் மனிதர்களின் உயர் குணங்களாக கருதப்படும் விசுவாசம் நாய்க்கு உண்டு.

காட்டில் வாழும் அனைத்து மிருகங்களுக்கும் இது போன்ற உயர் குணங்கள் உண்டு. கழுகு மற்றும் பருந்து வகையை சார்ந்த அனைத்து பறவைகளும் ஒரு முறை இணை சேர்ந்தால் வாழ்வில் கடைசி வரை அந்த இணையோடு மட்டுமே வாழும். தீக்கோழிகளும் வாழ்நாள் முழுவதும் ஒரே இணையோடு மட்டுமே வாழும்.

காட்டு நாய்கள் மற்றும் ஓநாய்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவது பெண் இனம் மட்டுமே. அந்த தலைமை மீது அந்த கூட்டம் வைத்திருக்கும் நம்பிக்கையும் விசுவாசமும் அளவிட முடியாதது. அந்த தலைமை தங்கள் கூட்டத்திற்கு ஆபத்தில்லாமல் பாதுகாக்க உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கும், அவசியம் என்றால் உயிரையும் விடும்.

யானைகள் கூட்டத்தையும் மூத்த பெண் யானையே தலைமை தாங்கி வழிநடத்தும். உணவு மற்றும் தண்ணீர் தேடி பயணப்படும் யானைகள் தலைமையை குருட்டு விசுவாசத்துடன் பின்பற்றவும் செய்யும். கூட்டத்தில் உள்ள எந்த குட்டிக்கும் அந்த கூட்டத்தில் உள்ள எந்த யானையும் பாலூட்டம். தாயை இழந்த அனாதை யானைக்குட்டிகளை பிற யானைகள் தங்கள் குட்டிகளுக்கு இணையாக பராமரிக்கும்.

ஆண் சிங்கங்கள் மற்றும் ஆண் சிவிங்கி சிறுத்தைகள் பருவ வயதை எட்டியவுடன் கூட்டத்தை விட்டோ தாயை விட்டோ விரட்டியடிக்கப்படும். அவ்வாறு விரட்டியடிக்கப்படும் இரண்டு அல்லது மூன்று ஆண் சிங்கங்களோ சிறுத்தைகளோ அண்ணன் தம்பிகளாக இருந்தாலும் சரி, சில வேளைகளில் அன்னியர்களாக இருந்தாலும் கூட கூட்டணி அமைத்து நட்பு பாராட்டும். இந்த நட்பும் கூட்டணியும் சாகும் வரை பிரியவும் செய்யாது, நட்புக்காக உயிரையும் கொடுக்கும்.

இது போல் நிறைய உயர்ந்த பண்புகளை காட்டு விலங்குகளிடம் பட்டியலிட முடியும்.

-நாடோடி

Tags:    

Similar News

தம்பிடி