கதம்பம்

அது ஆசைதான் படும்!

Published On 2024-04-16 08:15 GMT   |   Update On 2024-04-16 08:16 GMT
  • நீயோ, துயரத்தோடு தான் இருப்பது என்று உன் மனதில் முடிவெடுத்து விட்டாய்.
  • உன்னை சுற்றி நடக்கின்ற ஆனந்தமான நிகழ்வுகளை எல்லாம், அந்த எண்ணத்திற்கு அடகு வைத்து விட்டாய்.

மனம் இடை விடாமல் ஆசைப்பட்டுக் கொண்டே இருக்கிறது..

ஒரு கணம் கூட ஆசைப்படாமல் அது இருப்பதில்லை.

நாள் முழுக்க ஆசை.

இரவு முழுக்க ஆசை.

எண்ணங்களில் ஆசை.

கனவுகளில் ஆசை.

மனம் ஆசை படுவதிலேயே இருக்கிறது..

இன்னும் இன்னும் என்று ஆசைக்கு பின் ஆசை.

அதனால், மனம் எப்போதும் அதிருப்தியிலேயே கிடக்கிறது.

எதுவும் மனதை திருப்தி படுத்துவதில்லை.

எது வேண்டும் என்று ஆசைப்படுகிறாயோ, அதை அடைந்து விடலாம்.

அதை அடைந்து விட்ட பின்னர், அதன்மேல் வைத்து ஆசை நாளடைவில் முடிந்து விடுகிறது.

'அவளை' அடைய வேண்டும் என்ற தீராத ஆசை உனக்கு.

இதோ, அடைந்தாயிற்று.

அதன்மூலம் என்ன தான் கிடைத்து விட்டது என்கிறாய் ?

அடைந்த பின்னர், உனக்குள் இருந்த, கனவுகள், கற்பனைகள் அனைத்தும் பறந்து போய் விட்டன..

விரக்தி தான் நிற்கிறது.

இதற்குத்தானா இவ்வளவு கடின நிகழ்வுகளை சந்தித்தோம் என்ற எண்ணம், அந்த விரக்தியை உண்டு பண்ணிவிடுகிறது.

ஒன்றை கவனமாக நினைவில் கொள்ளுங்கள்..

மனதிற்கு ஆசைபடுவது எப்படி ? என்பது மட்டும் தான் தெரியும்.

எனவே, திருப்தியாக இருப்பதற்கு அது, உன்னை விடவே விடாது.

மனதின் உயிர் 'ஆசை' என்ற உணர்வில் உள்ளது.

மனதின் மரணம், 'திருப்தி' என்ற உணர்வில் உள்ளது.

எந்த மனம் தான் மரணமடைய விரும்பும் ?

நீயோ, துயரத்தோடு தான் இருப்பது என்று உன் மனதில் முடிவெடுத்து விட்டாய்..

உன்னை சுற்றி நடக்கின்ற ஆனந்தமான நிகழ்வுகளை எல்லாம், அந்த எண்ணத்திற்கு அடகு வைத்து விட்டாய்.

அது மட்டும் இல்லையென்றால், நீ துயரப் படுவதற்கு வேறு காரணமே இல்லை.

மனதை வெல்வதற்கு ஒரு வழியை புத்தர் சொல்கிறார்..

'மனதை அடக்கிக் கொண்டு இருக்க முயற்சிக்கதே..

அந்த செயலை விட, எதிர்விளைவுகளை தந்து விடும் செயல் வேறு எதுவும் இல்லை.

உனது தேவைகளை குறைத்துக் கொண்டே வந்து,..

நாளடைவில்,தேவைகள் எதுவும் இல்லாதவனாக இரு..

உன்னிடம் ஏற்கனவே உள்ளதில் 'திருப்தி' யாக இரு..

விரைவில் மனம் இறந்து போய் விடும்.

பிறகு, முடிவில்லாத கொண்டாட்டம் தான்!

-ஓஷோ.

Tags:    

Similar News

தம்பிடி