கதம்பம்

வாஸ்து நேரம்

Published On 2024-04-15 11:15 GMT   |   Update On 2024-04-15 11:15 GMT
  • வீடு கட்டுதல், கிணறு வெட்டுதல், கோவில் கட்டுதல் போன்ற பணிகளை தொடங்கினால் நன்மை தரும்.
  • வாஸ்து புருஷன் விழித்திருக்கும் 3 3/4 நாழிகை அதாவது ஒன்றரை மணி நேரம் விழித்திருப்பார்.

ஒரு ஆண்டில் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய மாதங்களில் வாஸ்து புருஷன் தூக்கத்தில் இருந்து எழுகிறார். அந்த நேரத்தில் வீடு கட்டுதல், கிணறு வெட்டுதல், கோவில் கட்டுதல், தொழிற்சாலை மற்றும் நிறுவனங்கள் கட்டுதல் போன்ற பணிகளை தொடங்கினால் நன்மை தரும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட நேரத்தில் வாஸ்து புருஷன் கண் விழித்திருப்பார். அந்த நேரத்தில் கட்டிட பூஜை போடுவது நன்மை தருவதாக இருக்கும்.

வாஸ்து புருஷன் விழித்திருக்கும் 3 3/4 நாழிகை அதாவது ஒன்றரை மணி நேரம் விழித்திருப்பார். அதில் முதல் 3/4 நாழிகை அதாவது 18 நிமிடங்கள் பல்துலக்குவார். அடுத்த 3/4 நாழிகை அதாவது 18 நிமிடங்கள் ஸ்னானம் செய்வார். அதற்கு அடுத்த 3/4 நாழிகை சாப்பிடுவார். அதற்கு அடுத்த 3/4 நாழிகை அதாவது 18 நிமிடங்கள் தாம்பூலம் தரிப்பார். பின்னர் மீண்டும் தூங்க சென்று விடுவார்.

மனை முகூர்த்தம் செய்பவர்கள் வாஸ்து புருஷன் சாப்பிடும்போது அந்த 18 நிமிடங்களிலும் தாம்பூலம் போடும் 18 நிமிடங்களிலும் ஆக மொத்தம் 36 நிமிடங்களில் செய்வது உத்தமம்.

இனி வாஸ்து புருஷன் விழித்திருக்கும் குறித்து பார்ப்போம்.

சித்திரை மாதம்: 10 ந்தேதி காலை 8 மணிமுதல் 9.30 மணிவரை கண் விழித்து இருப்பார். அதில் 8 மணி 54 நிமிடம் முதல் 9 மணி 30 நிமிடம் வரை மனை பூஜை செய்யலாம்.

வைகாசி மாதம்: 21 ந்தேதி காலை 9 மணி 12 நிமிடம் முதல் 10 மணி 42 நிமிடம் வரை கண்விழி்ததிருப்பார். அதில் 10 மணி 6 நிமிடம் முதல் 10 மணி 42 நிமிடம் வரை மனை பூஜை செய்யலாம்.

ஆடி மாதம்: 11 ந்தேதி காலை 6 மணி 48 நிமிடம் முதல் 8 மணி 18 நிமிடம் வரை வாஸ்து புருஷன் கண் விழித்து இருப்பார். இதில் 7 மணி 42 நிமிடம் முதல் 8 மணி 18 நிமிடம் வரை பூஜை செய்யலாம்.

ஆவணி மாதம்: 6 ந்தேதி பிற்பகல் 2 மணி 24 நிமிடம் முதல் 3 மணி 54 வரையில் கண்விழித்து இருப்பார். இதில் 3 மணி 18 நிமிடம் முதல் 3 மணி 54 நிமிடம் பூஜை செய்வது சிறந்தது.

ஐப்பசி மாதம்: 11 ந்தேதி காலை 6 மணி 48 நிமிடம் முதல் 8 மணி 18 நிமிடம் வரை வாஸ்து புருஷன் கண் விழித்து இருப்பார். இதில் 7 மணி 42 நிமிடம் முதல் 8 மணி 18 நிமிடம் வரையிலும் மனை பூஜை போடலாம்.

கார்த்திகை மாதம்: 8 ந்தேதி காலை 10 மணி முதல் 11.30 மணிவரை விழித்திருக்கும் போது 10 மணி 54 நிமிடம் முதல் 11 மணி 30 நிமிடம் வரை பூஜை போடலாம்.

தை மாதம்: 12ந்தேதி காலை 8 மணி 24 நிமிடம் முதல் 9 மணி 54 நிமிடம் வரை வாஸ்து கண் விழித்திருகும் நேரம் ஆகும். இதில் 9 மணி 18 நிமிடம் முதல் 9 மணி 54 நிமிடம் வரை வாஸ்து பூஜை செய்யலாம்.

மாசி மாதம்: 22 ந்தேதி 9 மணி 12 நிமிடம் முதல் 10 மணி 42 நிமிடம் வரை வாஸ்து புருஷன் கண்விழி்த்திருக்கும் காலம் ஆகும். இதில் 10 மணி 6 நிமிடம் முதல் 10 மணி 42 நிமிடம் வரை மனை பூஜை போடலாம்.

-சிவசங்கர்

Tags:    

Similar News

தம்பிடி