கதம்பம்

நாத்தனார்

Published On 2024-04-13 10:30 GMT   |   Update On 2024-04-13 10:30 GMT
  • நம் கிராமத்து உறவுக்களுக்கு பயிர்களின் தன்மையை பெயராக ஆக்கி இருக்கிறது தமிழ்!
  • ஒரு தாவர கன்றின் முனைப்பகுதியை கொழுந்து என்கிறோம்.

தமிழின் சிறப்பு என்னவென்றால் ஒரு பொருளுக்கோ, உறவுக்கோ உணர்வு பூர்வமான பெயர்களை, நம் மொழி உருவாக்கி விடும்!

மற்ற எந்த மொழிகளிலும் இந்த சிறப்பு கிடையாது. அத்தைக்கும், சின்னம்மாவுக்கு ஆங்கிலத்தில் ஆன்டி என ஒரு வார்த்தை இருப்பது போல் மற்ற மொழிகளில் கூட அப்படித்தான் இருக்கும்.

நம் கிராமத்து உறவுக்களுக்கு பயிர்களின் தன்மையை பெயராக ஆக்கி இருக்கிறது தமிழ்!

ஒரு இடத்தில் நாற்று பாவி பிறகு அதை பறித்து இன்னொரு இடத்தில் நடுவோம். அது செழிப்பாக பல கிளைகள் ஏந்தி விளையும்.

ஒரு இடத்தில் இருக்கும் பெண்ணை, இன்னொரு இடத்தில் திருமணம் செய்து கொடுக்கிறோம், அது கணவர் வீட்டில் செழிப்பாக வாழ்கிறது.

புகுந்த வீட்டுக்கு வரும் பெண், கணவரின் சகோதரியை அழைக்கும் உறவின் பெயர் "நாத்தனார்"

பிறந்தது இங்க தான் என்றாலும் இன்னொரு வீட்டுக்கு போய்விட்டார் என்பதை உணர்த்த நாற்று போல் ஆனார், "நாற்றனார்".அது மருவி"நாத்தனார்" ஆனது.

நாம கல்யாணம் பண்ற வரைக்கு மனைவியின் அப்பா நமக்கு மாமா உறவு கிடையாது.

திருமணம் ஆனவுடன் அவர் நமக்கு மாமா+ஆனார்!

அதான் மாமனார்!

மாமி+ஆனார்=மாமியார்!

ஒரு தாவர கன்றின் முனைப்பகுதியை கொழுந்து என்கிறோம். கொழுந்து என்றால் இளமை என்று பொருள்!

கணவருக்கு பின் பிறந்த சகோதரன் கொழுந்து+ஆனவர், அதாவது கொழுந்தனார்!

மனைவிக்கு இளையவள் கொழுந்து+ஆகியவள் கொழுந்தியாள்!

-ஆறுமுகம் கென்னடி

Tags:    

Similar News

தம்பிடி