கதம்பம்

யார் பெரியவர்?

Published On 2024-03-13 11:01 GMT   |   Update On 2024-03-13 11:01 GMT
  • வான் குருவி எனப்படும் தூக்கணாங் குருவிக்கூடு.
  • பிற உயிர்களிடத்தும் நாம் சமத்துவ உணர்வு கொண்டிருக்க வேண்டும்.

"வான்குருவியின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்

தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்

வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாம்காண்

எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது."

-ஔவையார்

வான் குருவி எனப்படும் தூக்கணாங் குருவிக்கூடு, அரக்கு எனப்படும் வலிமையான இயற்கைப் பசை, தேன்அடை, சிந்தனைச் சிக்கலை நம்முள் உருவாக்கிவிடும் சிலந்தி வலை இவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் புல்லிய புலனங்களே! ஆனால் இந்த அறிவியல் உலகில் எந்த மேதையாலும் இவற்றை உருவாக்க இயலுமா?

ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பு இருக்கிறது; சாதாரண பறவையான வான் குருவி கட்டுகின்ற கூட்டை இந்தக் கணினி யுகத்தில் வேறு எவராலும் கட்டித் தொங்கவிட்டு அதில் அக்குருவிகளைக் குடி வைக்க முடியுமா? முடியவே முடியாது !

அதாவது இந்த உலகத்தில் ஆறறிவுப் படைத்த மனிதர்களாலும் செய்ய முடியாத செயல்களும் இருக்கவே செய்கின்றன என்பதை இடித்துக் காட்டி, வாழ்வில் பிற மனிதர்களிடத்தும், பிற உயிர்களிடத்தும் நாம் சமத்துவ உணர்வு கொண்டிருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதே இப்பாடலின் நோக்கம் !

-வை.வேதரெத்தினம்.

Tags:    

Similar News

தம்பிடி