கதம்பம்
null

நீங்க சரியாக சொல்லணும்..

Published On 2024-03-11 10:07 GMT   |   Update On 2024-03-11 10:08 GMT
  • நீங்க இன்னும் பெட்டரா சொல்லணும்னு அவர் எதிர்பார்க்கிறார்.
  • நீங்க இன்னும் பெட்டரா சொல்லணும்னு அவர் எதிர்பார்க்கிறார்.

'சோ' சொல்கிறார்...

ஒரு படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரும் நானும் பங்கேற்ற காட்சி படமாகிக் கொண்டிருந்தது. அந்த ஷாட்டில் எம்.ஜி.ஆருக்கு கொஞ்சம் நீளமான வசனம். எனக்கு ஒரே ஒரு வார்த்தை - 'சரி' என்று மட்டும் தான் சொல்ல வேண்டும்.

ஷாட் முடிந்தது. டைரக்டர் நீலகண்டன் 'இன்னொரு டேக்' என்று சொல்லிவிட்டு என்னிடம் "நீங்க உங்க வசனத்தை எப்படி சொன்னீங்க?" என்று கேட்டார்.

நான், "சரி என்று சொன்னேன் சார்" என்றேன்.

"அப்படிச் சொல்லாதீங்க. அந்த 'சரி' கரெக்டா வரணும். அதுக்காகத்தான் இன்னொரு டேக், 'ச...ரி' என்று கொஞ்சம் இழுத்துச் சொல்லுங்க" என்றார் நீலகண்டன்.

இன்னொரு டேக் முடிந்தது. டைரக்டருக்குத் திருப்தி இல்லை. மூன்றாவது டேக்கிற்கு உத்திரவிட்ட டைரக்டர், "சோ! அந்த டயலாக்கை நீங்க இன்னும் சரியாச் சொல்லணும்" என்றார்.

"சரியை இதுக்கு மேலே எப்படி ஸார் சரியாச் சொல்றது? என்று கேட்ட நான், எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சொன்னேன்,

" ஸார்! என் டயலாக் 'சரி'.அதை இதுக்கு மலே சரியா சொல்லமுடியாது. டைரக்டர் அதுக்காக ரீடேக் எடுக்கலை. உங்க டயலாக்கை நீங்க இன்னும் பெட்டரா சொல்லணும்னு அவர் எதிர்பார்க்கிறார். அதை உங்ககிட்ட சொல்ல மனமில்லாம, என்னை தப்பு சொல்றார். இந்த ரீடேக்கெல்லாம் உங்களுக்காகத்தான். எனக்காக இல்லை!

உங்க டயலாக்கை நீங்க சரியா சொல்ற வரைக்கும் என் 'சரி' டயலாக் சரியில்லைன்னு சொல்லி, டேக் மேலே டேக் போகப்போகுது" என்றேன்.

எம்.ஜி.ஆர் கடகடவென்று சிரிக்க ஆரம்பித்து விட்டார். நீலகண்டன் நெளிய, எம்.ஜி.ஆரின் வசனம் மீண்டும் ஒத்திகை பார்க்கப்பட்டு ஷாட் ஒழுங்காக முடிந்தது.

பிறகு நீலகண்டன் என்னிடம், "எதையுமே இப்படிப் போட்டு உடைச்சுடறதா? சிலதைக் கண்டுக்காம விடறது நல்லதில்லையா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டாரே தவிர, கோபப்படவில்லை. எம்.ஜி.ஆரும் அந்த நிலைமையை மிகவும் ரசித்தாரே தவிர, தவறாக நினைக்கவேயில்லை!

-பரதன் வெங்கட்

Tags:    

Similar News

தம்பிடி