கதம்பம்

சிங்கத்தை ஏமாற்றும் மாடுகள்

Published On 2024-03-08 09:05 GMT   |   Update On 2024-03-08 09:05 GMT
  • மாடுகளை சிங்கங்கள் தொடர்ந்து தாக்கி வந்தன.
  • சிங்கம் நேருக்கு நேர் மாடுகளை வேட்டை ஆடுவதில்லை என கண்டுபிடித்தார்.

போட்ஸ்வானா.. சிங்கங்கள் மிகுதியாக உள்ள நாடு. 3000 சிங்கங்கள் உள்ளன. மாடுகள் வளர்ப்பும் மிகுதியாக உள்ள நாடு.

அரிய மிருகமான சிங்கத்தை கொல்ல சட்டபூர்வமான தடை உள்ளது.

ஆனால் மாடுகளை சிங்கங்கள் தொடர்ந்து தாக்கி வந்தன. வேலி போட்டு எல்லாம் கட்டுபடி ஆகாத ஏழைகள் ஏராளமாக உள்ள நாடு.

மாடுகளை புல்வெளிகளில் தான் மேய்த்தாக வேண்டும்...என்ன செய்வது என யாருக்கும் தெரியவில்லை.

அதன்பின் அங்கே ஒரு மாடு மேய்ப்பவர் ஒரு எளிய விசயத்தை கண்டுபிடித்தார்.

ஒரு சிங்கம் அவரை தாக்க வந்தபோது சும்மா அதை நேருக்கு நேர் பார்க்கையில் அது பார்வையை தாழ்த்திக்கொண்டு ஓடிவிட்டது.

சிங்கம் கொன்ற மாடுகள் எல்லாமே பின்னால் பதுங்கி இருந்து தாக்கபட்டவையே

சிங்கம் நேருக்கு நேர் மாடுகளை வேட்டை ஆடுவதில்லை என கண்டுபிடித்தார்.

அதன்பின் மாடுகளின் முதுகில் இருபுறமும் இரு கண்களை பெயிண்டால் வரைந்தார்கள்.

நிஜ கண் மாதிரியே இருந்தன அக்கண்கள்.

அதன்பின் சிங்கங்கள் மாடுகளை தாக்குவது சுத்தமாக நின்றுவிட்டது.

இப்ப போட்ஸ்வானாவில் எல்லா மாடுகளுக்கும் முதுகில் கண்கள் வரையபட்டுள்ளன.

- நியாண்டர் செல்வன்

Tags:    

Similar News

தம்பிடி