கதம்பம்
null

வானம் எனும் மாயை

Published On 2024-02-23 11:00 GMT   |   Update On 2024-02-23 11:00 GMT
  • வானம் என்று நாம் சொல்வது, மேலே கிடையாது.
  • பூமியின் இடுப்பில் கட்டிய ஒட்டியாணம்போலப் பரந்திருக்கிறது.

அறிவியலின்படி, வானம் (ஆகாயம்) என்று எதுவும் இல்லை. பகலில் பார்க்கும் வானம் வேறு. இரவில் பார்க்கும் வானம் வேறு. பகல் வானம் என்பது வெறும் சிலநூறு கிலோமீட்டர்கள் தூரத்தில் (உயரத்தில் அல்ல) இருப்பது. ஆனால் இரவு வானம், பல பில்லியன் ஒளியாண்டுகள் தூரமுள்ளது. இரண்டிற்கும் அணுக்கருவுக்கும், அல்ப்ஸ் மலைக்குமுள்ள தூர வித்தியாசம் உண்டு.

நீங்கள் நினைக்கும் வானத்தில், சந்திரனோ, சூரியனோ, நட்சத்திரங்களோ கிடையாது. அவை இருப்பது ஒரு பாய்வெளியில் (சரியாய்த்தான் படிக்கிறீர்கள்). அதை வானம் என்று சொல்ல முடியாது. விண்வெளியென்று சொல்லலாம். விண்ணும், வானும் தமிழில் ஒன்றா என்று முதலில் பார்க்க வேண்டும். ஒன்று என்றால், Space க்கு ஒரு புதுச்சொல்லைத் தமிழில் கண்டுபிடிக்க வேண்டும்.

எனவே, 'வானம் தொட்டுவிடும் தூரம்தான்'. 'ஆகாயமே எல்லை'. 'விண்ணைத் தாண்டி வருவாயா?' என்பதெல்லாம் கறிக்குதவாது. பேச்சுக்குக்கூட வான எல்லையைத் தொடமுடியாது.

கடைசியாக ஒன்று. வானம் என்று நாம் சொல்வது, மேலே கிடையாது. அது பூமியின் பக்கவாட்டில் இருக்கிறது. பூமியின் இடுப்பில் கட்டிய ஒட்டியாணம்போலப் பரந்திருக்கிறது.

-அருண் நாகலிங்கம்

Tags:    

Similar News