கதம்பம்

கழிவு நீக்கும் பானம்

Published On 2024-02-20 07:55 GMT   |   Update On 2024-02-20 07:55 GMT
  • வாழ்நாள் முழுதும் “கேன்சர்” என்ற சொல்லே நம் வாழ்க்கை அகராதியில் இல்லாமல் போகும்.
  • வயதுவித்தியாசமின்றி உட்கொள்ளலாம்! உணவாகவும், மருந்தாகவும், செயல்புரியும் உன்னத இயற்கை பானம்.

உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை பற்றி பார்ப்போம்.

திடக்கழிவு, திரவக்கழிவு, வாயுக்கழிவு, சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் மருத்துவக்கழிவு..

இவைகளை வாழ்நாள் முழுவதும், சிரமமில்லாமல் நீக்கும், எளிமையான, சுவையான முறை இதோ..

வெந்நீர், எலுமிச்சை சாறு, தேன் இந்த மூன்றுதான் இதற்கு தேவை.

செய்முறை: ஒரு டம்ளர் நீரை குறைந்த தனலில் வைக்கவும் . கொதிக்க வேண்டியதில்லை. நாம் தாங்கும் சூடு இருந்தால் போதும்!

ஒரு காலி டம்ளரில் 1/2 எலுமிச்சை, சிறியதாயிருந்தால் ஒரு எலுமிச்சை பிழிந்துக்கொள்ளவும்!

3 ஸ்பூன் தேன் சேர்த்து, வெந்நீர் கலந்து, ஸ்பூனில் சிறிது சிறிதாக, அனுபவித்து, உமிழ் நீருடன் நன்றாக உறவாடி, பின் அருந்தவும்!

காலையில் முதல் உணவாக, வெறும் வயிற்றில் அருந்தவும்! எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான உடனடி குளுக்கோஸ், தரமான உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும் கிடைக்கும் !

வாழ்நாள் முழுதும் "கேன்சர்" என்ற சொல்லே நம் வாழ்க்கை அகராதியில் இல்லாமல் போகும்!

வயதுவித்தியாசமின்றி உட்கொள்ளலாம்! உணவாகவும், மருந்தாகவும், செயல்புரியும் உன்னத இயற்கை பானம்!

- சிவசங்கர்

Tags:    

Similar News

தம்பிடி