கதம்பம்

காதல் சின்னத்தின் கணக்கு

Published On 2023-02-08 12:05 IST   |   Update On 2023-02-08 12:05:00 IST
  • யமுனை நதி ராதைக்கும் கோபியருக்கும் மட்டுமல்ல, காதலின் சின்னமாக போற்றப்படும் மும்தாஜுக்கும் பொருந்தும்.
  • 7 உலக அதியசயங்களில் ஒன்றாகத் திகழும் தாஜ்மஹால் 1983 ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

தாஜ்மஹாலை வடிவமைத்துக் கட்டிய ஆர்கிடெக்ட்- உஸ்தாத் அஹமத் லஹூரி. இன்றைய பாகிஸ்தான் பஞ்சாபில் பிறந்த பெர்ஷிய வம்சத்தைச் சேர்ந்த அஹமத் லஹூரி, டெல்லி செங்கோட்டைக்கு அடிக்கல் நாட்டியவர்.

யமுனை நதி ராதைக்கும் கோபியருக்கும் மட்டுமல்ல, காதலின் சின்னமாக போற்றப்படும் மும்தாஜுக்கும் பொருந்தும்.

யமுனையாற்றின் தெற்குக்கரையில் அமைந்த 42 ஏக்கர் பரப்பளவு வளாகத்தில் பிரதான கல்லறை 1632 ல் ஆரம்பித்து 16 ஆண்டுகள் கழித்து 1648 கட்டி முடிக்கப்பட்டது. நுழைவுவாயில், திருச்சுற்று மாளிகை, மேற்கில் உள்ள பள்ளிவாசல் கிழக்கில் உள்ள மாற்று மண்டபம் போன்றவை பின்னர் கட்டப்பட்டு 1653 முற்றுப் பெற்றது.

கட்டுமானப் பணியில் சுமார் 20000 கலைஞர்களும் தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

அந்தக்காலத்தில் கட்டி முடிக்க 320 கோடி செலவாகி இருக்கிறது. தற்போதைய மதிப்பில் சுமார் 7200 கோடி ரூபாயாகும்.

7 உலக அதியசயங்களில் ஒன்றாகத் திகழும் தாஜ்மஹால் 1983 ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தாஜ்மஹால் கட்டி முடிக்கும்போது இருந்த அதே நிலையில் பராமரிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1996 ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தாஜ்மஹாலைச் சுற்றிய 10400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு பகுதி Taj Trapezium Zone என்று அறிவிக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் அகற்றப்பட்டன.

வருடத்திற்கு சுமார் 60 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த நுழைவுக் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.

நீல வானத்தின் பின்னணியில் பச்சைப் பசேல் புல்வெளியின் செந்நிற கட்டுமானங்களும் தளங்களுக்கும் நடுவே சூரிய ஒளியிலும் நிலவொளியிலும் ஜொலிக்கும் தூய வெண்மை நிற கல்லறை பார்ப்பவரை உண்மையிலே மயக்கம் கொள்ளத்தான் செய்கிறது.

-ஆனந்தன் சன்னாசி

Tags:    

Similar News