கதம்பம்

தோசையில் பிரபஞ்சம்...

Published On 2023-08-02 16:00 IST   |   Update On 2023-08-02 16:00:00 IST
  • ஆரம்ப காலத்தில் விஷேச நாட்களில் தோசையை தெய்வத்திற்கு படையலாக படைத்து பின் உண்டு வந்தார்கள்.
  • இன்றும் கூட அழகர் கோவில் பெருமாளுக்கு தோசையை படையலாக படைத்து பிரசாதமாக கோவிலில் வழங்குகிறார்கள்.

நாம் அன்றாட உண்ணும் தோசையில் ஆன்மிகமும் ஜோதிடமும் மறைந்துள்ளது.

தோசை செய்ய உபயோகிக்கும் பொருட்களுள் நவ கிரகங்கள் அடக்கம்..!

அக்னி = சூரியன்

அரிசி = சந்திரன்

உளுந்து = ராகு.. கேது

வெந்தயம் = புதன்

தோசை கல் (இரும்பு) = சனி

தோசையின் நிறம் = செவ்வாய்

அதை உண்பவர்கள்= குரு (ஆண்), சுக்கிரன் (பெண்)

இதன் உருவம் =(Galaxy) பிரபஞ்சமே!!

தோசையை Clock-wise சுட்டால் தான் வரும்!

பிரபஞ்சம் சுற்றுவதும்அப்படித்தானே!

இந்த தோசை ஒரு ஜோதிட பரிகாரமாக இருந்திருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் விஷேச நாட்களில் தோசையை தெய்வத்திற்கு படையலாக படைத்து பின் உண்டு வந்தார்கள்.

இன்றும் கூட அழகர் கோவில் பெருமாளுக்கு தோசையை படையலாக படைத்து பிரசாதமாக கோவிலில் வழங்குகிறார்கள்.

அப்போது இருந்த நம் முன்னோர்களுக்கு தோசை பலகார வகையாகத்தான் இருந்தது. பின் நாளில் மக்களுக்கு வசதி வந்த பிறகு அன்றாட உணவு வகையாக மாறி விட்டது.

தோசை இந்தச் சொல் எப்படி வந்தது என்பதற்கு மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் சொல்லும் விளக்கம்:

(கல்லில்) தோய்த்துச் செய்வது என்னும் பொருளில், தோய் + செய் என்னும் இரண்டு சொற்கள் இணைந்து உருவான இச்சொல், மக்கள் வழக்கில் தோசை என்று ஆனது என்ற குறிப்பு உண்டு.

Tags:    

Similar News