- சாப்பாட்டு மேஜையில் அமர்ந்த உடன் சிற்றுண்டி பரிமாறிய தாய்க்கு பிள்ளைகள் நன்றி கூறினர்.
- பள்ளிக்குச் செல்ல தாய் உடை மாற்றியதும் பரிவுடன் தேங்யூ மம்மி என்று நன்றி கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டனர்.
நேரு தன்னுடன் லண்டனில் வழக்கறிஞர் ஆவதற்காக கல்லூரியில் பயின்ற பிரான்ஸ் நாட்டு நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார்.
அதிகாலையில் நண்பரின் மனைவி தனது இரு பிள்ளைகளுக்கும் காபி கொடுப்பதற்காக அவர்களது அறைக்குள் நுழைந்தாள். இரு பிள்ளைகளும் தாய்க்கு காலை வணக்கம் தெரிவித்தனர்.
தாயிடம் காபியை வாங்கிக் கொண்டு தேங்யூ மம்மி என்று சிரித்த முகத்துடன் நன்றி கூறினர்.
சாப்பாட்டு மேஜையில் அமர்ந்த உடன் சிற்றுண்டி பரிமாறிய தாய்க்கு நன்றி கூறினர்.
பள்ளிக்குச் செல்ல தாய் உடை மாற்றியதும் பரிவுடன் தேங்யூ மம்மி என்று நன்றி கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டனர்.
மூத்த மகளுக்கு 8 வயது, அடுத்த மகனுக்கு 6 வயது. இவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த நேரு தன் நண்பரிடமும் அவரது மனைவியிடமும் "பிள்ளைகளுக்கு உணவு அளிக்க வேண்டியதும் உடை அணிவிக்க வேண்டியதும் பெற்றவர்கள் கடமை தானே, இவற்றுக்கெல்லாமா பிள்ளைகள் பெற்றோருக்கு நன்றி சொல்ல வேண்டும்? இது அனாவசியமாக படவில்லையா? உள்ளத்தில் இருக்க வேண்டிய அன்பு உதட்டிற்கு வரணுமா?" என்று கேட்டார்.
அதற்கு நேருவின் நண்பர் "பெற்றோருக்கு நன்றி சொல்லி பழகினால் தான் வெளி உலகிற்குள் நுழையும் போது கற்பிக்கும் ஆசிரியர்க்கும் தனக்கு பல வழிகளில் உதவும் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் நன்றி சொல்லும் வழக்கம் வரும்" என்றார்.
இதைத்தான் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்றனர் நம் முன்னோர்கள்.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் என்பது வள்ளுவர் வாக்கு.
-பொ.ம. ராசமணி