கதம்பம்

டைசனிடம் ஒரு கேள்வி

Published On 2024-02-16 11:17 GMT   |   Update On 2024-02-16 11:17 GMT
  • நான் ஒரு விபசார விடுதியில் பிறந்து வளர்ந்தேன்.
  • என்னை தற்காத்துக்கொள்ள சிறையில் குத்து சண்டையை கற்றேன்.

மைக் டைசனிடம் "ஏன் உலக குத்து சண்டை சாம்பியன்கள் எல்லாருமே கருப்பர்களாகவே இருக்கிறார்கள்?" என்ற கேள்வி கேட்கப்பட்டது

"வெள்ளையர்களுக்கு குத்து சண்டையில் ஈடுபடவேண்டிய அவசியமே இல்லையே? அவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

அமெரிக்க குத்துசண்டையில் அதிகமாக வெற்றி பெறுபவர்கள் எப்போதுமே அந்தந்த காலகட்டத்தில் மோசமான வறுமையில் இருக்கும் மக்களாகவே இருப்பார்கள்.

நான் ஒரு விபசார விடுதியில் பிறந்து வளர்ந்தேன். என் அப்பாவை நான் பார்த்ததே இல்லை. வீட்டுக்கு அடிக்கடி பல ஆண்கள் வந்துபோவார்கள். அக்காவையும், அம்மாவையும் குடித்து விட்டு அடிப்பார்கள். வீட்டுக்கு ஆண்கள் வருகையில் அம்மாவும், அக்காவும் என்னை வெளியே அனுப்பிவிடுவார்கள். தெருக்களில் மோசமான சகவாசம் கிடைத்தது. திருட்டில் ஈடுபட்டேன். சிறை சென்றேன். அங்கே என்னை தற்காத்துக்கொள்ள சிறையில் குத்து சண்டையை கற்றேன்.

நன்றாக படித்து ஒரு அளவு நல்ல சம்பளம் வரும் வேலைக்கு போக முடிந்திருந்தால் நான் ஏன் குத்து சண்டையில் ஈடுபட போகிறேன்?" என பதில் சொன்னார்

எம்.எம்.ஏ எனும் மிக்சட் மார்ஷியல் ஆர்ட்ஸ் போட்டியில் நாக் அவுட் ஆகி மொத்த நினைவையும் இழந்த வீரர்கள் ஏராளம்.

சில தொழில்கள் வெளியே இருந்து பார்க்க கிளாமராக இருக்கும். ஆனால் அதில் இருப்பவர்கள் அதில் வேறு வழியில்லாமல் தான் அதில் ஈடுபட்டு இருப்பார்கள்.

- நியாண்டர் செல்வன்

Tags:    

Similar News

தம்பிடி