கதம்பம்

மனப்பொருத்தம் மட்டும் போதுமா?

Published On 2023-01-27 09:05 GMT   |   Update On 2023-01-27 09:05 GMT
  • பெரும்பாலான காதல் திருமணங்கள் வெறும் பாலின ஈர்ப்பில் நடைபெறுகின்றன.
  • காதலித்து திருமணம் செய்யும் பொழுது இருக்கும் சந்தோஷம் காலம் ஆக ஆக படிப்படியாக குறைந்து விடுகிறது.

காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் ஜாதக பொருத்தம் பார்க்கவேண்டுமா? - பெரும்பாலனவர்களுக்கும், காதலித்து கொண்டிருப்பவர்களுக்கும் ஏற்படும் சந்தேகம் இது.

என்னை பொருத்தவரை கண்டிப்பாக காதல் திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்க்க வேண்டும். சில பேர் மனப்பொருத்தம் மட்டும் இருந்தால் போதும், ஜாதக பொருத்தம் தானாகவே வந்துவிடும் என்பர்.

பெரும்பாலான காதல் திருமணங்கள் வெறும் பாலின ஈர்ப்பில் நடைபெறுகின்றன. மேலும் காதல் திருமணக்கள் 75 சதவீதம் தோல்வியில் முடிந்து விடுகிறது. காதலித்து திருமணம் செய்யும் பொழுது இருக்கும் சந்தோஷம் காலம் ஆக ஆக படிப்படியாக குறைந்துவிடுகிறது.

பொருத்தம் இல்லாவிட்டாலும், காதலித்து கொண்டிருப்பவர்கள் கட்டாயம் இணைய வேண்டும் எனில், பரிகாரம் செய்து இணைக்கலாம்.

ஜாதக பொருத்தம் பார்க்கும்பொழுது, ரஜ்ஜு பொருத்தம் (மாங்கல்ய பொருத்தம்) இல்லாவிட்டாலும், பெண் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானமும், ஆண் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானமும் சரியாக இருந்தால் போதும். ஆனால் யோனி பொருத்தம் (தாம்பத்திய பொருத்தம்) கட்டாயம் இருக்க வேண்டும். தாம்பத்திய பொருத்தம் இருந்தால் கணவன், மனைவிக்குள் சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இருவரும் பிரிய மாட்டார்கள்.

பெரும்பாலான ஆண்களாக இருக்கட்டும், பெண்களாக இருக்கட்டும் தன் துணை அழகாக இருந்தாலும் வேறு நபருடன் தவறான உறவு கொள்வதற்கு மிக முக்கிய காரணம் யோனி பொருத்தம் சரியாக அமையாததுதான்.

பொருத்தம் பார்ப்பது மிக முக்கிய காரணம் என்னவெனில், எதிர்காலத்தில் இருவருக்கும் வரக்கூடிய திசா அமைப்புகள், அவற்றின் நற்பலன்கள் போன்றவற்றை கணித்து, இருவருக்கும் ஒரே நேரத்தில் மிக கடினமான நேரம் வராமல் இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால்தான் வாழ்வு வளம் பெறும். இல்லறம் நல்லறமாகும்.

- ஜோதிடர் சுப்பிரமணியன்

Tags:    

Similar News

தம்பிடி
நாத்தனார்