கதம்பம்

தெய்வத்தின் அருள்

Update: 2023-02-01 08:36 GMT
  • எம்.ஜி.ஆர். தொண்டையில் சிக்கிய தோட்டாவின் சிதறல் ஒன்று மருத்துவர்களால் நீக்கப்படவில்லை.
  • எம்.ஜி.ஆருக்கு கடுமையான தும்மல் ஏற்பட்டது. பலமாகத் தும்மினார்.

எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டு ஆபரேஷன் நடந்து காப்பாற்றப்பட்டபோதும்... தொண்டையில் சிக்கிய தோட்டாவின் சிதறல் ஒன்று மருத்துவர்களால் நீக்கப்படவில்லை. சிக்கலான இடத்தில் தங்கிவிட்டது. அப்படி அதை நீக்க முயற்சித்தால் அது அவரின் உயிருக்கே ஆபத்தாகும் என்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

எம்.ஜி.ஆர் உடல் நலம் தேறியதும், ஒருநாள் இரவோடு இரவாக மருதமலை கோயிலுக்கு அழைத்துச்சென்று... மூலஸ்தானத்திலேயே எம்.ஜி.ஆரை நிறுத்தினார் சின்னப்பா தேவர்.

முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டபோது... "முருகா... உன் கோயிலுக்கு மின்சார விளக்கேத்தி வைத்தவர்... இன்று இருளாகிக் கிடக்கிறார். அவர் வாழ்க்கைல நீ ஒளியேற்றியே ஆகணும். இதை நீ செய்யலேன்னா, உன் கோயிலுக்கு குண்டு வச்சிடுவேன். மறுபடியும் நீ இருட்டில் இருக்கவேண்டி இருக்கும்" எனக்கோபம் கொண்ட சித்தரைப்போல முருகனுடன் சண்டை போட்டு வேண்டிக்கொண்டிருந்தார்.

(அன்பு அதிகமானால் கண்ணீர் வடித்தபடியும், கோபம் அதிகமானால் ஏக வசனத்தில் கடுமையாக சண்டை போடுவதும், கடவுள் முருகனுக்கும் பக்தன் தேவருக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பான ஒரு வழக்கம்).

பிறகு எம்.ஜி.ஆரை அழைத்துக்கொண்டு சென்னை வந்துவிட்டார்.

சரியாக ஒரு வாரம் தான்... எம்.ஜி.ஆருக்கு கடுமையான தும்மல் ஏற்பட்டது. பலமாகத் தும்மினார். அந்த தோட்டா சிதறல் மூக்கின் வழியே வெளியே வந்துவிட்டது.

உண்மையில் இது ஒரு அதிசயமான நிகழ்ச்சி தான். முருகனிடம் அப்படி சண்டை போட்டு, தேவர் வேண்டிக்கொண்டதால்தான் இது நிகழ்ந்தது என்றும் கூறுவர்.

- பரதன் வெங்கட்

Tags:    

Similar News