கதம்பம்

அமெரிக்கா பதுக்கியுள்ள தங்கம்...

Published On 2023-02-01 08:56 GMT   |   Update On 2023-02-01 08:56 GMT
  • எட்டாயிரம் டன் தங்கம் அமெரிக்க அரசின் வசம் பாதுகாப்பில் உள்ளது.
  • உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 25% அமெரிக்க அரசிடம் தான் உள்ளது.

அமெரிக்க அரசு மூன்று பொருள்களை பதுக்கி வைத்துள்ளது. ஒன்று தங்கம், எட்டாயிரம் டன் தங்கம் அமெரிக்க அரசின் வசம் பாதுகாப்பில் உள்ளது. 26,000 படைவீரர்கள் அதற்கு பாதுகாப்பாய் நிற்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடிட் செய்வதற்காக மட்டுமே சிறிதளது தங்கம் எடுக்கப்படும். புதியதாக சேர்ப்பதும் இல்லை, விற்பதும் இல்லை.

26,000 பேருக்கு சம்பளம் கொடுத்து, சோறு போட்டு தங்கத்தை 75 ஆண்டுகளாக இப்படி புதையல் காத்த பூதமாக ஏன் வைத்திருக்க வேண்டும்? ஏன் என்றால் இதை விற்க எல்லாம் வேண்டாம். விற்போம் என சொன்னாலே போதும். உலக தங்க சந்தை சரிந்துவிடும். காரணம் உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 25% அமெரிக்க அரசிடம் தான் உள்ளது.

அடுத்தபடியாக 70 கோடி பீப்பாய் பெட்ரோலையும் பதுக்கி வைத்துள்ளது அமெரிக்கா, வளைகுடா போர் 1970களில் நடந்த சமயம் பெட்ரோல் தட்டுப்பாடு வந்தால் என்ன செய்வது என சொல்லி நாடெங்கும் ரகசியமாக பெட்ரோலை தேக்க தொட்டிகளை அமைத்து 70 கோடி பீப்பாய் பெட்ரோலை பாதுகாத்து வைத்துள்ளனர்.

மூன்றாவதாக இவர்கள் பதுக்கி வைத்துள்ளது சீஸ்.... 150 கோடி டன் சீஸை நாடெங்கும் குளிர் பாதுகாப்பறைகள் வைத்து பதுக்கி வைத்துள்ளனர். ஏதாவது உணவு தட்டுப்பாடு வந்தால் என்ன பண்ணுவது? சீஸ் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? சீஸ் கெட்டுபோகும் பொருள் என்பதால் கெடுவதற்குமுன் எடுத்து இலவசமாக ஏழைகளுக்கு உணவு வழங்கும் புட் பேங்களுக்கு வினியோகம் செய்வார்கள். அதன்பின் மீண்டும் சீஸை நிரப்பி குடோன்களை புல் ஸ்டாக்குக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.

கனடா அரசும் விட்டேனா பார் என மேபிள் சிரப்பை நிரப்பி வைத்துள்ளது. மேபிள் சிரப் என்பது தேன் மாதிரியான ஒரு இனிப்பு. உற்பத்தி கூடுகையில் அதை இங்கே கொண்டுவந்து நிரப்பி விலை சரியாமல் பார்த்துக்கொள்வார்கள். விலை கூடுகையில் இங்கிருந்து சப்ளை செய்து விலை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வார்கள்.

- நியாண்டர் செல்வன்

Tags:    

Similar News

தம்பிடி
நாத்தனார்