உள்ளூர் செய்திகள்

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது

Published On 2022-09-24 15:23 IST   |   Update On 2022-09-27 17:57:00 IST
  • வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேரை கைது செய்யப்பட்டனர்.
  • அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின்பேரில், பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன் தலைமையில், வனவர்கள் குமார், பிரதீப்குமார், வனக்காப்பாளர் ராஜூ, வனக்காவலர் அறிவுச்செல்வன் ஆகியோர் களரம்பட்டி கிராமத்தில் தாமரைக்குளம் என்ற வனப்பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகம்படும்படியாக ஒரு நாட்டு துப்பாக்கியுடன் 2 பேர் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர். இதனை கண்ட வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் பெரம்பலூர் அருகே செஞ்சேரியை சேர்ந்த தங்கராசு மகன் கலைச்செல்வன்(வயது 32), லாடபுரத்தை சேர்ந்த ராஜா மகன் ரமேஷ்(30) என்பதும், அவர்கள் 2 பேரும் நாட்டு துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியையும் மற்றும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் வன உயிரின பாதுகாப்புச் சட்டம், படைக்கலன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கலைச்செல்வன், ரமேசை வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News