செய்திகள்
வைரலாகும் புகைப்படம்

ஆப்கனில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

Published On 2021-08-23 06:29 GMT   |   Update On 2021-08-23 06:37 GMT
ஆப்கானிஸ்தானில் நிலவும் பதற்ற சூழலில், அந்நாட்டில் எடுக்கப்பட்டதாக கூறும் புகைப்படம் வைரலாகி வருகிறது.


தலிபான்கள் ஆப்கனை கைப்பற்றியது முதல் அந்நாட்டை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கிருந்து உடனடியாக வெளியேற துவங்கிவிட்டனர். முடிந்தவரை அங்கிருந்து தப்பிக்கும் எண்ணத்தில் பலர் விமான நிலையம் நோக்கி படையெடுத்தனர். இதோடு விமானத்தில் ஏறவும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சிலர் விமானத்தில் தொங்கிய படி பயணம் செய்ய முற்பட்டு கீழே விழுந்தும் உயிரிழந்தனர். அந்த வரிசையில், பலர் அமெரிக்க விமான படையை சேர்ந்த சரக்கு விமானத்தில் ஏற முயற்சித்தனர். 

அமெரிக்க விமான படை விமானத்தின் புகைப்படம் ஒன்று காபூலில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் இருப்பது உண்மையான விமானம் இல்லை என வலைதள பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



வைரல் பதிவுகளில், இரண்டு புகைப்படங்கள் இணைக்கப்பட்டு ஒன்று உண்மையான விமானம் என்றும், மற்றொன்று அசல் விமானம் போன்று காட்சியளிக்கும் காற்றடைக்கப்பட்ட போலி விமானம் என்றும் கூறப்பட்டுள்ளது.

புகைப்படங்களை இணையத்தில் தேடிய போது, ஆப்கனில் எடுக்கப்பட்ட பல்வேறு வீடியோக்கள் கிடைத்தன. அதில் பெரும்பாலான வீடியோக்களில், வைரல் புகைப்படத்தில் இருந்த விமானம் ஓடுதளத்தில் இருந்து கிளம்பும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. 

வீடியோவில் விமானத்தின் என்ஜின் சத்தம் தெளிவாக கேட்கிறது. அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ளது போன்று ஆப்கனில் காற்றடைக்கப்பட்ட போலி விமானம் நிறுத்தப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

Tags:    

Similar News