செய்திகள்
நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ரா பதிவிட்டதாக வைரலாகும் ட்விட்டர் பதிவு

Published On 2021-08-12 05:24 GMT   |   Update On 2021-08-12 05:24 GMT
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா பதிவிட்டதாக கூறி சர்ச்சை தகவல் அடங்கிய ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.


விவசாய குடும்பத்தை சேர்ந்த நீரஜ் சோப்ரா மற்றும் ரவி தாஹியா டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று அசத்தினர். இதைத் தொடர்ந்து #FarmersShineInOlympics எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலானது. இத்துடன் விவசாயிகள் போராட்டத்தை குறிக்கும் #FarmersProtest இணைக்கப்பட்டது. 

இதனிடையே டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா பதிவிட்டது போன்று காட்சியளிக்கும் ட்விட்டர் பதிவு வைரலாக துவங்கியது. “அரசின் அட்டூழியத்தால் நாட்டின் விவசாயிகள் பாதிக்கப்படும் போது, பதக்கம் வெல்வதில் எந்த பெருமையும் இல்லை.”  எனும் தகவல் ட்விட்டர் பதிவில் இடம்பெற்று இருக்கிறது. ட்விட்டர் பதிவு ஸ்கிரீன்ஷாட்டை பலர் பகிர்ந்து வருகின்றனர்.



இதுகுறித்த இணைய தேடல்களில், வைரல் பதிவு இடம்பெற்று இருக்கும் “@neeraj_chopra_” எனும் ட்விட்டர் கணக்கை நீரஜ் சோப்ரா பெயரில் வேறொரு நபர் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. உண்மையில் நீரஜ் சோப்ராவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு “@Neeraj_chopra1” ஆகும். அந்த வகையில் சர்ச்சை தகவலை நீரஜ் சோப்ரா பதிவிடவில்லை என உறுதியாகிவிட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News