செய்திகள்
மம்தா பானர்ஜி

இந்தியாவில் மம்தா பானர்ஜி தான் முதல் முறையா?

Published On 2021-08-11 05:23 GMT   |   Update On 2021-08-11 05:27 GMT
சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற பின் முதல்வர் பதவியை ஏற்று இருப்பவர்கள் பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



மேற்கு வங்க மாநிலத்தில் மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவியை மம்தா பானர்ஜி ஏற்று இருக்கிறார். முதல்வர் பதவியேற்று சில மாதங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றும் முதல்வர் பதவியை ஏற்க முடியுமா என்பதை அறிந்துகொள்ள சமூக வலைதளவாசிகள் ஆர்வம் செலுத்துகின்றனர்.

இந்தியாவிலேயே முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற போதும், முதல்வர் பதவியை ஏற்று இருப்பது மம்தா பானர்ஜி மட்டும் தான் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிலர், "மம்தா பானர்ஜிக்கு முன்பாக, மொரார்ஜி தேசாய் (1952, மகாராஷ்டிரா), திரிபுவன் சிங் (1970, உத்தரபிரதேசம்) மற்றும் சிபு சோரன் (2009, ஜார்கண்ட்) உள்ளிட்டோர் தங்களின் தொகுதியில் தோல்வியுற்ற போதும், முதல்வர் பதவியை ஏற்று இருக்கின்றனர்" என பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளனர்.  



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், மொரார்ஜி தேசாய் 1952-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் பதவியை ஏற்றார். திரிபுவன் சிங், சிபு சோரன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவே இல்லை என தெரியவந்துள்ளது. 

சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றும் முதல்வர் பதவியை ஏற்று இருப்பது மம்தா பானர்ஜி மட்டும் தானா என்பது தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. எனினும், மொரார்ஜி தேசாய், திரிபுவன் சிங், சிபு சோரன் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, முதல்வர் பதவியை ஏற்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Tags:    

Similar News