செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

வேலூரில் தி.மு.க.விற்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல- அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2019-08-10 08:12 GMT   |   Update On 2019-08-10 08:12 GMT
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க.விற்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை:

மதுரையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் இருக்கக் கூடிய ஏரிகள், குளங்கள், நீர்வழிச்சாலைகள் புனரமைக்கும் பணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர் ஒரு விவசாயி என்ற அடிப்படையில் இந்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

மதுரை மண்டலத்தில் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டு இருப்பினும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு காரணம் முதல்-அமைச்சர் எடுத்து வரும் திட்டங்கள் தான்.

நீர் நிலைகளில் யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் நிச்சயமாக அவை அகற்றப்படும். கடந்த ஆட்சியின் போது தான் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை உரிய காலங்களில் திறக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். எங்களுக்கு எந்தவித அரசியல் குறுக்கீடும் இல்லை.


வேலூர் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வினருக்கு கிடைத்திருப்பது உண்மையான வெற்றி அல்ல, சிறு பான்மையினரின் வழி மாற்றி கிடைத்த வெற்றி. இங்கு அ.தி.மு.க.வின் வாக்காளர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News