செய்திகள்

23-ந்தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தொடர முடியாது - தங்க தமிழ்செல்வன்

Published On 2019-05-07 10:20 IST   |   Update On 2019-05-07 11:56:00 IST
உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையின் காரணமாக வருகிற 23-ந்தேதிக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தொடர முடியாது என்று தங்க தமிழ்செல்வன் கூறினார். #EdappadiPalaniswami #ADMK #ThangaTamilselvan

மதுரை:

அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

3 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்திருப்பது சரியான தீர்ப்பு. சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டுள்ளதால் சபாநாயகர், கொறடா சட்டப்படி சிக்கி உள்ளனர்.

ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீசு அனுப்பியபோது இது போன்ற உத்தரவு வந்திருந்தால் தமிழக அமைச்சர்கள் சிறைக்கு சென்றிருப்பார்கள். இனி என்ன செய்தாலும் முதல்-அமைச்சர் பழனிசாமி ஆட்சியை தொடர முடியாது.

 


வருகிற 23-ந்தேதிக்கு பிறகு அவர் வீட்டுக்கு புறப்பட வேண்டியதுதான். மத்தியில் பா.ஜனதா வெற்றி பெற்றாலும் அ.தி.மு.க.வுக்கு பலவீனமாகவே இருக்கும்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நகைச்சுவை நடிகரைபோல செயல்படுகிறார். முதல்-அமைச்சர் பழனிசாமி எப்படி பிரசாரம் செய்தாலும் திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. டெபாசிட் இழப்பது உறுதி.

ஜெயலலிதா மரணத்தின் மர்மம், பொள்ளாச்சி, கொடநாடு விவகாரம் குறித்து அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்ததும் விசாரணை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #EdappadiPalaniswami #ADMK #ThangaTamilselvan

Similar News