செய்திகள்

தமிழகத்தில் இடைத்தேர்தல்- பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: தமிழிசை

Published On 2019-05-03 05:51 GMT   |   Update On 2019-05-03 06:41 GMT
தமிழகத்தில் இடைதேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி சாதகமாக உள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #TNBypolls #BJP #TamilisaiSoundararajan
தூத்துக்குடி:

ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடக்கும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தூத்துக்குடிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் ஒடுக்கப்பட வேண்டும். தினகரனுடன் கூட்டணி வைத்துள்ளவர்கள் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்துள்ளார்கள். கோவில் சிலைகள் நிச்சயமாக பாதுகாக்க படவேண்டும். சிலைகள்கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் குழு சிறப்பான பணியை செய்து வருகிறார்.

இதை தான் உச்சநீதிமன்றமே சொல்கிறது. பா.ஜ.க.வின் கருத்தும் அதுதான். தமிழகத்தில் இடைதேர்தலும், பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி சாதகமாக உள்ளது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆட்சி மாற்றம் வந்தால் அனைத்தும் சரியாகிவிடும் என சொல்கிறார்.


இவர் தி.மு.க.ஆட்சியில் துணை முதல்வராக இருந்த போது என்ன செய்தார். பிரதமரை களவாணி என சொல்கிறார் ஸ்டாலின். சர்க்காரியா கமிசன் மூலம் விஞ்ஞான திருடன் என சொல்லப்பட்டவர்கள் தி.மு.க.வினர். என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசிவருகிறார். ஸ்டாலின் கனவுலகில் நடந்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார். #TNBypolls #BJP #TamilisaiSoundararajan
Tags:    

Similar News