செய்திகள்

4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு மதிமுக பாடுபடும்- வைகோ

Published On 2019-04-20 07:20 GMT   |   Update On 2019-04-20 07:20 GMT
தமிழகத்தில் மே 19-ம் தேதி நடைபெற உள்ள 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு மதிமுக பாடுபடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். #Vaiko #TNElections2019
சென்னை:

தமிழகத்தில் 38 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று கட்சி நிர்வாகிகளுடன் திமுக  தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தர். சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்புக்குப் பிறகு வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-



பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பார்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததுடன், தொடர்ந்து நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தேர்தல் பணிக்கு ஊக்கம் அளித்த திமுக தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்தோம். இந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும் என்பது எங்களின் நம்பிக்கை. இதேபோல் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற மதிமுக பாடுபடும்.

தேர்தலின்போது வன்முறை ஏற்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படவேண்டும். இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றமாக உள்ள பொன்னமராவதியில் அமைதியை நிலைநாட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #TNElections2019
Tags:    

Similar News