செய்திகள்

யாருடன் கூட்டணி?- கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை

Published On 2019-03-01 07:25 GMT   |   Update On 2019-03-01 09:34 GMT
பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். #DMDK #Vijayakanth #LSPolls
போரூர்:

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேபோல் தி.மு.க.வும், தே.மு.தி.க.வை தங்கள் அணியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டது.

இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது, பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், அக்பர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தே.மு.தி.க.வினர் கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமையகத்தில் விருப்ப மனு வழங்கி வருகிறார்கள்.

இன்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி 50-க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து விருப்பமனு தாக்கல் செய்தார். #DMDK #Vijayakanth #LSPolls
Tags:    

Similar News