உள்ளூர் செய்திகள்

சரக அளவிளான விளையாட்டு போட்டிகளில்அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2023-11-01 15:35 IST   |   Update On 2023-11-01 15:35:00 IST
  • அரூரில் சரக அளவிலான விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  • மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு

தருமபுரி மாவட்டம் , அரூர் அருகே உள்ள ஆர்.கோபிநாதம்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் சரக அளவி லான விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அரூர் சரக அளவில் நடைபெற்ற வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், செஸ், குத்துச்சண்டை, தடகளம் உள்ளிட்ட போட்டிகளில் 150- க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று விளையாடி முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பிடித்து மாவட்ட மாநில அளவிலான போட்டி களுக்கு தகுதி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் ஆகியோரை முதன்மை கல்வி அலுவலர் குண சேகரன் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார். தலைமை ஆசிரியர் செல்வம், உதவி தலைமை ஆசிரியர் கைலாசம் மணி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News