உள்ளூர் செய்திகள்

செல்போன் டவரில் செல்ப் மோட்டார் திருடிய வாலிபர் கைது

Published On 2023-10-29 14:38 IST   |   Update On 2023-10-29 14:38:00 IST
  • தருமபுரியில் செல்போன் டவரில் செல்ப் மோட்டார் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  • சீனிவாசன்(27) என்பவரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் 114 வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (62) இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். தனியார் நினுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர் தருமபுரி-ஒகேனக்கல் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அருகில் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அந்த செல்போன் டவரில் அலர்ட் ஒலி டவர் கண்காணிப்பாளராக பணியாற்றும் மணிகண்டன் என்பவருக்கு வந்துள்ளது.

இதனை தொடர்ந்து செல்போன் டவருக்கு சென்று பார்த்தபோது செல்போன் டவரில் இருந்த செல்ப் மோட்டர், மற்றும் கிராங்கிங் டிவைஸ்-1 ஆகியவற்றை மர்ம நபர் திருடி சென்று இருந்தனர். இது குறித்து செல்போன் நிறுவன மேலாளர் மணி அளித்த புகாரின் பேரில், தருமபுரி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வந்தனர். அதில் சவுளுபட்டியை சேர்ந்த காவேரி மகன் சீனிவாசன்(27) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News