உள்ளூர் செய்திகள்
- மர்ம நபர் ஒருவர் அங்கு வந்து ஜெயநாத்தின் லேப்-டாப்பை திருடி சென்றார்.
- பெருமாள் என்பவர் லேப்டாப்பை திருடியது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயநாத் (வயது28). ஏ.சி. மெக்கானிக்கான இவரது வீட்டில் லேப்-டாப்பை வைத்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டின் கதவு திறந்து இருந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் அங்கு வந்து ஜெயநாத்தின் லேப்-டாப்பை திருடி சென்றார். அப்போது அங்கு வந்த ஜெயநாத், மர்ம நபரை கையும் களவுமாக பிடித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நோதாஜி நகரைச் சேர்ந்தவர் பெருமாள் (23) என்பவர் லேப்டாப்பை திருடியது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.