உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி அருகே வாலிபர் மாயம்

Published On 2022-08-09 10:13 IST   |   Update On 2022-08-09 10:13:00 IST
  • கூடலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் திடீரென மாயமானார்.
  • புகாரின் பேரில் போலீசார் வாலிபரை தேடி வருகின்றனர்.

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் 13-வது வார்டு கே.கே.காலனியை சேர்ந்த கருப்பு மகன் பிரபாகரன்(28). இவர் கடந்த 5 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று வீரபாண்டி கோவிலுக்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News