உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
சின்னமனூரில் வாலிபர் நீரில் மூழ்கி பலி
- தடுப்பணையில் குளிக்கும்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மூச்சுதிணறி உயிரிழந்தார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
விழுப்புரம் மாவட்டம் பக்கரிபாளையத்தை சேர்ந்தவர் அய்யனார் மகன் சந்தோஷ்(18). இவர் தேனி அருகே சீலையம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்கு வந்தார்.
அப்போது அவர் மற்றும் நண்பர்கள் ஆகியோர் குளிக்கச்சென்றனர். தடுப்பணை அருகே குளிக்கும்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மூச்சுதிணறி உயிரிழந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.