உள்ளூர் செய்திகள்
இண்டூர் அருகே இளம்பெண் வாலிபருடன் ஓட்டம்
- பெண்ணை வாலிபரின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை.
- நேற்று அந்த பெண் வீட்டை விட்டு மாயமானார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துள்ள ராமர்கூடல் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண். இவரை வாலிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் பெண் பார்க்க வந்துள்ளார்.
அப்போது பெண்ணை வாலிபரின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. ஆனால் அந்த இளம்பெண்ணுக்கு, வாலிபரை பிடித்துள்ளது. இதனால் இருவீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று அந்த பெண் வீட்டை விட்டு மாயமானார். இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் ேதடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து அந்த பெண்ணின் தாயார் இண்டூர் போலீசில் எனது மகளை வாலிபர் ஒருவர் கடத்தி சென்று விட்டதாக புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.