உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ஆண்டிபட்டி அருகே மாணவியை பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோவில் கைது

Published On 2023-03-11 13:07 IST   |   Update On 2023-03-11 13:07:00 IST
  • 17 வயது சிறுவன் கடமலைக்குண்டுவை சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவியுடன் பழகி பலாத்காரம் செய்தார்.
  • போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் சிறுவனை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

வருசநாடு:

ஆண்டிபட்டி அருகில் உள்ள மயிலாடும்பாறையை சேர்ந்த 17 வயது சிறுவன் கடமலைக்குண்டுவை சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவியுடன் பழகி வந்துள்ளார். பின்னர் காதலிப்பதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த விபரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அந்த சிறுவனை கண்டித்துள்ளனர்.

இனிமேல் தனது மகளை பார்க்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று பள்ளியில் நடந்த செய்முறை தேர்வில் பங்கேற்று விட்டு மாணவி வீட்டில் இருந்தார். பெற்றோர்கள் வேலைக்கு சென்றதை அறிந்த சிறுவன் நைசாக வீட்டுக்குள் நுழைந்து மாணவியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார்.

அதன்பின்னர் அழுதுகொண்டே வீட்டில் இருந்த மாணவியிடம் பெற்றோர் விசாரித்ததில் நடந்த விவரங்களை கூறி உள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் சிறுவனை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News