உள்ளூர் செய்திகள்

சந்தூரில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி

Published On 2023-06-06 14:02 IST   |   Update On 2023-06-06 14:02:00 IST
  • உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சந்தூரில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • பொது மக்கள், வணிகர்கள் உள்ளிட்டோருக்கு மஞ்சபை வழங்கி, பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

மத்தூர்,

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சந்தூரில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. காட்டாகரம் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சந்தூர் பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்தும், தூய்மை பணியாளர்களிடம் மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குமாறும், பிளாஸ்டிக் பையை முற்றிலும் ஒழித்து பாக்கு மரத்தட்டுகள், வாழை இலை, பேப்பர் கப் போன்றவற்றை பயன்படுத்துவோம், மீண்டும் மஞ்ச பையை எடுப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பொது மக்கள், வணிகர்கள் உள்ளிட்டோருக்கு மஞ்சபை வழங்கி, பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கவுசல்யா மாதேஷ், கவுன்சிலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதனை தொடர்ந்து, பர்கூர் பிடிஓ சுப்பிரமணி, பேரணியை துவக்கி வைத்தார். தொழிலதிபர் சண்முகம், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி, கந்தவேல், கோவிந்தம்மாள், சண்முகவள்ளி, வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் கஜேந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இலவச மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது. மேலும், சுகாதார நிலைய வளாகத்தில் மரகன்றுகள் நடப்பட்டது.

Tags:    

Similar News