உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதி தொழிலாளி சாவு
- குருபரப்பள்ளி அருகே மோட்டர் சைக்கிள் லாரி மீது மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குருபரப்பள்ளி அருகே உள்ள பெரிய புலியரசியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 26). கூலித் தொழிலாளி. இவர் அதே பகதியை சேர்ந்த சக்திவேல் (17) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பந்தாரப்பள்ளி அருகில் கடந்த 24-ந் தேதி இரவு சென்று கொண்டிருந்தார்.
அப்போது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி திடீரென்று பிரேக் பிடித்து நின்றது. இதில் மோட்டார்சைக்கிள் லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சக்திவேல் படுகா யத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.