உள்ளூர் செய்திகள்
- மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பார்த்தசாரதி மீது அரசு பஸ் மோதியது.
- இந்த சம்பவம் குறித்து அரசு பஸ் ஓட்டுனர் முனுசாமி போலீசில் புகார் செய்தார்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், புழுதிகரையை சேர்ந்தவர் முனுசாமி (வயது53). இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணி புரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தருமபுரியில் இருந்து சிந்தல்பாடி வழியாக சேலம் நோக்கி பேருந்து ஓட்டிச் சென்றார்.
அப்போது சிந்தல்பாடி அருகே வந்த போது எதிரே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பார்த்தசாரதி மீது அரசு பஸ் மோதியது. இதில் பார்த்தசாரதிக்கு காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு மருத்துவத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து அரசு பஸ் ஓட்டுனர் முனுசாமி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீஸ்-இன்ஸ்பெக்டர் வசந்தா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.