சூளகிரியில் தனியார் மில்லில் அனல்காற்று வெளியேற்றும் பேன் விழுந்து வடமாநில தொழிலாளி சாவு
- நிலக்கரி கொதிகலனில் இருந்து சாம்பலை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
ஒடிசா மாநிலம் பாலாண்டி மாவட்டம், ஜம்கன் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜராஜடங்கு (38). கூலித்தொழிலாளி. இவரது நண்பரும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவருமான அபலடநாடா (22).
இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள தனியார் பேப்பர் மில்லில் வேலை பார்த்து வந்தனர். இதற்காக அவர்கள் மில்லில் உள்ள அறையில் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி கஜராஜடங்கு மில்லில் உள்ள நிலக்கரி கொதிகலனில் இருந்து சாம்பலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்–போது எதிர்பாராதவித மாக நிலக்கரி கொதிகலனில் உள்ள அனல் காற்று வெளியேற்றும் பேன் கஜராஜடங்கு மீது விழுந்தது. இதில் தீக்காயம் அடைந்த அவரை, ஓசூரில் உள்ள தனியார் மருத்துவ–மனையில் அனுமதிக்கப்–பட்டார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக, பெங்களூரு–வில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனும திக்கப்–பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அபலடநாடா சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.