உள்ளூர் செய்திகள்

ஆவடியில் மூதாட்டி கொலையில் தொழிலாளி கைது

Published On 2022-10-05 14:16 IST   |   Update On 2022-10-05 14:16:00 IST
  • ஆவடியை அடுத்த கோவர்தனகிரி,பொதிகை நகர், பவானி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சாவித்திரி.
  • கொலையுண்ட சாவித்திரி சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து இருந்ததாக தெரிகிறது.

திருநின்றவூர்:

ஆவடியை அடுத்த கோவர்தனகிரி,பொதிகை நகர், பவானி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சாவித்திரி (வயது71). இவர் தனியாக தங்கி இருந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள அறையில் சாவித்திரி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளி குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் சாவித்திரியை கொலை செய்தது அதே பகுதியைச் சேர்ந்த கார்பெண்டரான முனுசாமி (55) என்பது தெரிந்தது. இதையடுத்து முனுசாமியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பணத் தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிய வந்தது.

கொலையுண்ட சாவித்திரி சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து இருந்ததாக தெரிகிறது. இதற்கு முனுசாமி உதவியாக இருந்து உள்ளார். சம்பவத்தன்று சாவித்திரியின் விட்டுக்கு வந்த முனுசாமி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த முனுசாமி அருகில் கிடந்த இரும்பு கம்பியால் சாவித்திரியின் தலையில் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயம்அடைந்த அவர் இறந்து இருப்பது தெரியவந்தது.

இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? வேறு யாரேனும் உதவினார்களா? என்று கைதான முனுசாமியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News