உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

கூடலூரில் மின்சாரம் தாக்கி வயர்மேன் பலி

Published On 2023-10-26 11:21 IST   |   Update On 2023-10-26 11:21:00 IST
  • மின்வயரை சரிசெய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டார்.
  • படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

கூடலூர்:

கூடலூர் கர்ணம் பழனிவேல்பிள்ளை சந்து பகுதியை சேர்ந்தவர் கேசவன்(45). இவர் சுருளிபட்டி மின்வாரியத்தில் வயர்மேனாக வேலைபார்த்து வந்தார். அதேபகுதியை சேர்ந்த மூக்கம்மாள் என்பவரது வீட்டிற்கு மின்சப்ளை வரவில்லை.

இதனை சரிபார்க்க கேசவன் சென்றார். மின்வயரை சரிசெய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் வழியிலேயே கேசவன் இறந்துவிட்டதாக பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News