உள்ளூர் செய்திகள்
10 அடி நீள மலைப்பாம்பை மீட்ட தீயணைப்புத்துறையினர்.
இரையை விழுங்கிய நிலையில் மழையில் ஊர்ந்து சென்ற 10 அடி நீள மலைப்பாம்பு
- சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு இரையை விழுங்கிய நிலையில் ஊர்ந்து சென்றது.
- இதைப்பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடியில் நேற்றிரவு சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்தநிலையில் போடி-மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு இரையை விழுங்கிய நிலையில் ஊர்ந்து சென்றது.
இதைப்பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் மலைப்பாம்பு நகர முடியாமல் இருந்ததை கண்டனர். பாம்பை பிடித்து போடி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டுவந்தனர்.
வனஅலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் பாம்பை விட்டனர்.