உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 தேர்வில் 2 ஆயிரத்து 709 மாணவர்கள் தோல்விக்கான காரணம் என்ன?

Published On 2022-06-22 14:37 IST   |   Update On 2022-06-22 14:37:00 IST
  • சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 2 ஆயிரத்து 709 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
  • அடுத்து வரும் பிளஸ்-2 துணை தேர்வை எழுத மாணவர்களை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சேலம்:

தமிழகத்தில் பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் ஒரே நாளில் வெளியிடப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 324 பள்ளிகளை சேர்ந்த 17,500 மாணவர்கள், 19,661 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 161 பேர் பிளஸ்-2 தேர்வினை எழுதினர். இவர்களில் மாணவர்கள் 15,674 பேர், மாணவிகள் 18,778 பேர் என மொத்தம் 34 ஆயிரத்து 452 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

13 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்பட ெமாத்தம் 105 பள்ளிகள் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதேசமயம், பிளஸ்-2 தேர்வு எழுதிய 2,709 பேர் தேர்ச்சி பெறவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

தேர்வில் தோல்விக்கு மாணவர்கள் தங்களது பள்ளிகளில் அன்றாடம் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை வீட்டில் வைத்து படிக்காமல் இருப்பது, படிப்பில் கவனத்தை செலுத்தாமல் அதிகமாக விடுமுறை எடுப்பது, பள்ளியில் கட் அடிப்பது, செல்போனில் உள்ள ஆன்லைன் விளையாட்டில் கவனத்தை செலுத்துவது, உடல் நல குறைவு, படிக்காமல் அஜாக்கிரதையாக செயல்படுவது என பல்வேறு காரணங்கள் உள்ளன.

எனவே இனிவரும் காலங்களில் படிப்பில் மாணவர்கள் தங்களது கவனத்தை செலுத்தினால் தோல்வியை தவிர்க்க முடியும். ஆகவே தோல்வி அடைந்த மாணவர்கள், நம்பிக்கை தளராமல் அடுத்து வரும் துணை தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று விடலாம். அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். உயர் கல்வி தொடர எளிதாக கல்லூரிகளில் இடம் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News