உள்ளூர் செய்திகள்

முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

மயிலாடும்பாறை அருகே மக்கள் தொடர்பு முகாமில் ரூ.13.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

Published On 2023-10-12 05:26 GMT   |   Update On 2023-10-12 05:26 GMT
  • மயிலாடும்பாறை அருகே நரியூத்து கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
  • 155 பயனாளிகளுக்கு ரூ.13.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

வருசநாடு:

மயிலாடும்பாறை அருகே நரியூத்து கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். இந்த முகாமுக்காக ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு 54 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும் வேளாண்மை துறை, மாநில வாழ்வாதார இயக்கம், சுகாதார துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1.38 லட்சம் மதிப்பீட்டில் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம், மக்களை தேடி மருத்துவம் திட்டம் மருத்துவ பெட்டகங்கள் என மொத்தம் 155 பயனாளிகளுக்கு ரூ.13.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முகாமில் 100க்கும் அதிகமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர். மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

Tags:    

Similar News