உள்ளூர் செய்திகள்

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 4,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - ஆவுடையப்பன் தகவல்

Published On 2022-11-23 15:16 IST   |   Update On 2022-11-23 15:16:00 IST
  • தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
  • ஆதரவற்ற 500 பேர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்குதல், இறகு பந்து போட்டிகள் உள்ளிட்ட 4,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

அதன்படி ராதாபுரம் தொகுதிக்கு திசையன்விளையிலும், நாங்குநேரி தொகுதிக்கு களக்காட்டிலும், அம்பாச முத்திரம் தொகுதிக்கு சேரன்மகாதேவியிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. மேலும் வருகிற 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை 32 இடங்களில் தி.மு.க. கொடியேற்றி இனிப்பு வழங்குதல். முதியோர் இல்லங்களில் மதிய உணவு, ரத்ததான முகாம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், பார்வையற்றோர் பள்ளியில் மதிய உணவு, ஆதரவற்ற 500 பேர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்குதல், இறகு பந்து போட்டிகள் உள்ளிட்ட 4,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகள் எனது தலைமையில் எம்.பி., மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News