நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார நடை பயிற்சி திட்டம்
- தருமபுரியில் நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார நடை பயிற்சி திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- மாணவ மாணவிகள் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன், நலமுடன் வாழ நடப்போம் நலம் பெறுவோம்" எனும் சுகாதார நடைபயிற்சி திட்டம் இன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது .
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் அதியமான்கோட்டை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்திலிருந்து மாவட்ட கலெக்டர் இல்லம் வழியாக சிப்காட் சாலை, தடங்கம் வரையிலான 8 கி.மீ தொலைவிலான சுகாதார நடைபயிற்சியை மாவட்ட கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதவல்லி, தி.மு.க மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பழனியப்பன், நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, நல்லம்பள்ளி பிடிஓ லோகநாதன், வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கல்லூரி மாணவ மாணவிகள் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.