உள்ளூர் செய்திகள்
சாதனை படைத்த மாணவ-மாணவிகளை வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பாராட்டிய காட்சி
சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வில் வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை
- விழாவில் பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி பரிசுகளையும், கேடயங்களையும் வழங்கினார்.
- மாணவர்களின் கற்றல் மேம்பாட்டிற்காக காலை, மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தியதற்காக பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.
திசையன்விளை:
சி.பி.எஸ்.இ. ெபாதுத் தேர்வில் திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில் பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி பரிசுகளையும், கேடயங்களையும் வழங்கினார். மேலும் பள்ளி முதல்வர் பாத்திமா எலிசபெத் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டி பொன்னாடை போர்த்தினார். மாணவர்களின் கற்றல் மேம்பாட்டிற்காக காலை, மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தியதற்காக பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.