உள்ளூர் செய்திகள்

சங்கரநாராயணசுவாமி 8-ம் நாள் விழாவில் சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் விஷ்ணு அம்சத்தில் பச்சை சாத்தி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்தபடம்.

சங்கரன்கோவிலில் சித்திரை திருவிழாவில் நடராஜர் விஷ்ணு அம்சத்தில் பச்சை சாத்தி வீதி உலா

Published On 2023-05-02 08:36 GMT   |   Update On 2023-05-02 08:36 GMT
  • சித்திரை திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • தேரோட்டம் நாளை காலை 9.30 மணிக்கு நடக்கிறது.

சங்கரன்கோவில்:

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறும் வழக்கம்.

வீதி உலா

இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடந்து வருகிறது.

அதன்படி சித்திரை திருவிழா 7-ம் நாளான நேற்று இரவு சிவகாமி அம்பாள் சமேத நடராஜருத்ரன் அம்சத்தில் சிகப்பு சாத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு பிரம்மா அம்சத்தில் சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் வெள்ளை சாத்தி அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

தொடர்ந்து 8-ம் நாளான இன்று காலை சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் விஷ்ணு அம்சத்தில் பச்சை சாத்தி பக்தர்களுக்கு காட்சி யளித்தார்.

தொடர்ந்து வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் சுவாமி, அம்பாள் தந்த பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு நடக்கிறது.

இதில் விநாயகர், சுவாமி, அம்பாள் 3 தேர்கள் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News