உள்ளூர் செய்திகள்

தேசியகொடியை அவமதிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

Published On 2022-08-13 08:42 GMT   |   Update On 2022-08-13 08:42 GMT
  • தேசியகொடியை அவமதிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என கலெக்டர் எச்சரிக்கை விடுத்தள்ளார்.
  • இன்று (13-ந் தேதி) முதல் 15-ந் தேதி வரை தேசியகொடியை பறக்கவிட வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின்75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு மத்திய, மாநில அரசு உத்தரவுகளின்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள், கட்டடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இன்று (13-ந் தேதி) முதல் 15-ந் தேதி வரை தேசியகொடியை பறக்கவிட வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி, அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள் மட்டுமே தேசியகொடிையஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பதிலாக வேறு எவரேனும் தேசியகொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும்.

ஊராட்சிகளில் தேசிய கொடியை ஏற்றுவது தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால் விருதுநகர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநரிடம் 7402608260 மற்றும் 04562-252765 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். தேசியகொடியை அவ மதிப்பு செய்யும் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News