உள்ளூர் செய்திகள்

தயார் நிலையில் உள்ள தேர்கள்.

தேரோட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Published On 2022-07-09 09:38 GMT   |   Update On 2022-07-09 09:38 GMT
  • 11-ந் தேதி நடைபெறும் தேரோட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • 10-ந்தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், 11-ந்தேதி தேரோட்டம், நடைபெற உள்ளது.

அருப்புக்கோட்டை

தமிழகத்தில் சில மாதங்களாக தேர் திருவிழாவின் போது உயிர் பலிகள் மற்றும் விபத்துக்கள் நடந்தன. குறிப்பாக தஞ்சாவூர் அருகே களிமேட்டில் அப்பர் தேரோட்ட திருவிழாவில் சிறுவன் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அதனை தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் கோவில் திருவிழாக்கள் மற்றும் தேரோட்ட விழாக்களில் விபத்துகள் நடந்தன.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த மீனாட்சி- சொக்கநாதர் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாணம், அடுத்த நாள் தேரோட்டம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கொரோனா தொற்று காரணமாக 2 வருடங்களாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த கோவிலில் கடந்த 1-ந் தேதி கொடியேற்றதுடன் திருவிழா ஆரம்பமானது.

10-ந்தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், 11-ந்தேதி தேரோட்டம், நடைபெற உள்ளது. தேரோட்டமானது சொக்கலிங்கபுரம், வெள்ளக்கோட்டை, 4 ரத வீதிகளில் மீனாட்சி- சொக்கநாதர் பவனி வருவார்கள்.

சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். தேரோட்ட விழாவில் அசம்பாவிதமும், விபத்துகளும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தி திருவிழாவை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News